சென்னை: வழக்கறிஞர் வெட்டிக் கொலை  - முன்விரோதம் காரணமா? போலீசார் விசாரணை

சென்னை: வழக்கறிஞர் வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா? போலீசார் விசாரணை

சென்னையில் வழக்கறிஞர் ஒருவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் வழக்கறிஞர் ஒருவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை துரைப்பாக்கம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் வழக்கறிஞர் ஜெய்கணேஷ் (32), இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல ரவுடி சிடி.மணி துப்பாக்கியுடன் கைதான வழக்கு ஒன்றில் இவரும் உள்ளார். அதன் பிறகு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று வழக்கறிஞர்களோடு பேசி விட்டு இரவு துரைப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் அவரை கத்தியால் கொடூரமாக வெட்டிக் விட்டு தப்பியோடி விட்டனர். இதில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் படுகாயமடைந்த ஜெய்கணேஷை அருகில் உள்ளவர்கள், துரைப்பாக்கம் போலீசார் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த துரைப்பாக்கம் போலீசார், தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com