\
காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம்.. விரக்தியில் வழக்கறிஞர் எடுத்த விபரீத முடிவு

காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம்.. விரக்தியில் வழக்கறிஞர் எடுத்த விபரீத முடிவு

காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம்.. விரக்தியில் வழக்கறிஞர் எடுத்த விபரீத முடிவு
Published on

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரெவின் குமார் (27). இவர், ஆலந்தூர் நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராக உள்ளார். இந்நிலையில், இவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணை ஒட்டியம்பாக்கம், மலையடிவாரத்தில் உள்ளது. அங்கு சென்று விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்த அவரை பார்த்த அவரது சகோதரர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் உதவியாளர் பரிசோதித்து பார்த்தபோது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தகவலறிந்து வந்த பெரும்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதற்கட்ட தகவலில், காதலித்த பெண் ஒரு வருடத்திற்கு முன்பாக வேறொருவரை திருமணம் செய்து கொண்ட விரக்தியில் இருந்த அவர், தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com