கோயம்பேடு காய்கறி சந்தை நாளை செயல்படும் - வியாபாரிகள் சங்கம்
கோயம்பேடு காய்கறி சந்தை நாளை செயல்படும் என அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலானது. இந்நிலையில் நேற்று சென்னையின் முக்கிய காய்கறி சந்தையாக பார்க்கப்படும் கோயம்பேடு காய்கறி சந்தையில் கூட்டம் குறைவாகவே இருந்தது. சிறு கடை வியாபாரிகள் மட்டுமே காய்கறிகள் வாங்கிச் சென்றனர்.
இதற்கிடையே மக்கள் கூட்டம் அதிகம் இல்லாததாலும், கொரோனா முன்னெச்சரிக்கையாகவும், நாளை மற்றும் நாளை மறுநாள் கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அளிப்பதாக வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்தனர். இதனால் அத்தியாவசியத் தேவையான காய்கறி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் மக்களின் அத்தியாவசியத் தேவையைக் கருதி, விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும், இதனால் நாளையும், நாளை மறு நாளும் கோயம்பேடு மார்க்கெட் செயல்படும் என அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.