சென்னை கொடுங்கையூரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு 12 ஆக அதிகரித்துள்ளது.
கொடுங்கையூரில் கடந்த 15-ஆம் தேதி பேக்கரி ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க முயற்சி நடந்த போது சிலிண்டர் வெடித்ததில் தீயணைப்பு வீரர் ஏகராஜ் உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு நாளும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை பரமானந்தம், அபிமன்யூ, கடை உரிமையாளர் ஆனந்த் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். தீ விபத்தில் காயமடைந்த கண்ணதாசன் நகரைச் சேர்ந்த இளையராஜா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணியளவில் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழப்பு 12 ஆக அதிகரித்துள்ளது.