சிசிடிவி கண்காணிப்பில் சிறந்த நகரங்கள்! டெல்லியை முந்தியது சென்னை!
வி.பி.என் வைரஸ் தடுப்பு மற்றும் தொழில்நுட்ப சேவைகளை பகுப்பாய்வு செய்யும் இங்கிலாந்து பின்னணியைக்கொண்ட காம்பாரி டெக் நிறுவனம் உலகின் சிறந்த 50 நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியாவின் டெல்லி, ஹைதராபாத், சென்னை ஆகிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன. தெலங்கானா 16 வது இடத்தையும் சென்னை 21 வது இடத்தையும் டெல்லி 33 வது இடத்தையும் பிடித்துள்ளன.
ஹைதராபாத் நகரம், இந்தியாவிலேயே அதிக சி.சி.டி.வி (கண்காணிப்பு) கேமராக்கள் பொறுத்தப்பட்டப் பட்டியலில் உலகத்திலேயே 20 வது இடத்தைப்பிடித்து பாராட்டைப் பெற்றிருக்கிறது. முதல், 18 இடங்களை சீன நகரங்களும் 19 இடங்களை தைவானும் பிடித்துள்ளன. மேலும், அதிக மக்கள் தொகை உள்ள இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் குறைவாக பொறுத்தப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
நாட்டின் தலைநகரான 30 கோடி மக்கள்தொகை வசிக்கும் டெல்லியில் 4 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள்தான் பொறுத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, 1000 பேர் கொண்ட மக்கள்தொகை வசிக்கும் பகுதியில் 14 கண்காணிப்பு கேமராக்கள் மட்டுமே பொறுத்தப்பட்டுள்ளன. இது, ஹைதராபாத்தைவிட குறைவாக உள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் 1 கோடி மக்கள் தொகை வசிக்கும் பகுதியில் 2.8 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.