\
ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்
Published on

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃபின் மரணம் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐஐடி விடுதியில் தங்கி, முதுகலை முதலாமாண்டு படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீஃப், கடந்த ‌நவம்பர் மாதம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்டோரை சந்தித்து, மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் மனு அளித்தார்.

இதனிடையே சிபிஐ விசாரணைக் கோரிய மனு மீது, தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என கூறி சென்னை உயர்நீதிமன்றமும் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், பாத்திமா லத்தீஃபின் மரணம் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com