\
சென்னை: மனைவி கண்டித்ததால் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர் எடுத்த விபரீத முடிவு

சென்னை: மனைவி கண்டித்ததால் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர் எடுத்த விபரீத முடிவு

சென்னை: மனைவி கண்டித்ததால் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர் எடுத்த விபரீத முடிவு
Published on

குடிப்பழக்கத்திற்கு அடிமையான ரயில்வே ஊழியர் மனைவி கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் பாபு (38). இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகளான நிலையில், இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ரயில்வே டெக்னீசியனாக பணிபுரிந்து வந்த தினேஷ்பாபு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்.

இதனால் தினந்தோறும் குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனை அவரது மனைவி நந்தினி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட மனவேதனையில் குடிபோதையில் இருந்த தினேஷ் பாபு வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைப்பார்த்த உறவினர்கள் தினேஷ்பாபுவை மீட்டு சிகிச்சைக்காக கே.எம்.சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தினேஷ்பாபு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த திருமுல்லைவாயல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com