\
விடுதி அறையில் பெண்கள் உடை மாற்றுவது படம்பிடிக்கப்பட்டதாக புகார்

விடுதி அறையில் பெண்கள் உடை மாற்றுவது படம்பிடிக்கப்பட்டதாக புகார்

விடுதி அறையில் பெண்கள் உடை மாற்றுவது படம்பிடிக்கப்பட்டதாக புகார்
Published on

சென்னையில் தனியார் விடுதியில் பெண் உடை மாற்றுவதை படம்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சென்னையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடும்பத்தினர் 46 பேருடன் வந்திருந்தார். அனைவரும் தங்கும் படியாக தனியார் விடுதி ஒன்றை கட்டணத்திற்கு எடுத்து இருந்துள்ளனர். அவர்கள் தங்கியிருந்த அறைக்கு வெளியே இருந்த கேமரா, அறையைப் பார்க்கும் விதத்தில் இருந்ததால் அவர்கள் சந்தேகமடைந்தனர்.

இதையடுத்து தங்களை அங்கிருந்த கேமரா படம்பிடித்திருக்குமோ என்ற சந்தேகத்தில், வரவேற்பறை கணினியில் சோதிக்கக்காட்டச் சொல்லி பார்த்துள்ளனர். அப்போது, அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் உடை மாற்றும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், இதுதொடர்பாக பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விடுதிக்கு வந்த காவல்துறையினர் கேமராக்களின் காட்சிகளை பார்வையிட்டனர். பின்னர், இரு தரப்பினருக்கும் சமரசப் பேச்சுவார்த்தை நடந்ததையடுத்து வழக்குப் பதிவு செய்யப்படாமல் முடித்து வைக்கப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com