\
ஜெயலலிதா இல்ல அவசரச் சட்டம்: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு !

ஜெயலலிதா இல்ல அவசரச் சட்டம்: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு !

ஜெயலலிதா இல்ல அவசரச் சட்டம்: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு !
Published on

ஜெயலலிதா இல்லத்தை கையகப்படுத்தும் அவசர சட்டம் குறித்து 6 வாரத்தில் பதிலளிக்க ஆளுநரின் செயலர், தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேதா நிலையத்தை கையகப்படுத்த ஆளுநர் பிறப்பித்த அவசர சட்டத்தை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்திருந்தார்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் இது குறித்து ஆளுநர் செயலர், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை செயலாளர், இயக்குனர், சட்ட துறை செயலாளர் ஆகியோர் 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com