\
மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கும் நபர்களுக்கு முன் ஜாமீன் கிடையாது - சென்னை உயர்நீதிமன்றம்

மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கும் நபர்களுக்கு முன் ஜாமீன் கிடையாது - சென்னை உயர்நீதிமன்றம்

மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கும் நபர்களுக்கு முன் ஜாமீன் கிடையாது - சென்னை உயர்நீதிமன்றம்
Published on

மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கும் நபர்களுக்கு முன் ஜாமீன் கிடையாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மணல் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, மணல் கடத்தலால் தான் நிலத்தடி நீர் ஆதாரங்களும்
சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படுவதாக நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தெரிவித்தார். அத்துடன் மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன் ஜாமீன் கிடையாது அறிவித்தார்.

தமிழகம் முழுவதும் மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கிய 40 பேரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்தாலும், மணல் கடத்தல் தொடர்பான முன்ஜாமீன் வழக்குகளின் எண்ணிக்கை குறையவில்லை நீதிபதி கூறினார். முன் ஜாமீன் பெற்று விடலாம் என்ற நம்பிக்கையாலேயே தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com