தமிழ்நாடு
குழந்தையுடன் மனைவி தற்கொலை விவகாரம்.. கணவனின் தண்டனை ரத்து..!
குழந்தையுடன் மனைவி தற்கொலை விவகாரம்.. கணவனின் தண்டனை ரத்து..!
கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால், ஒன்றரை வயது குழந்தையுடன் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கும், சங்கீதாவுக்கும் 2000-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில், மாணிக்கத்திற்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால், சங்கீதா தனது ஒன்றரை வயது குழந்தையுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரை தற்கொலைக்கு தூண்டியதாக, மாணிக்கத்திற்கு சேலம் மகளிர் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மாணிக்கம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், கணவன் வேறொரு பெண்ணுடன் பழகி வந்ததை மனரீதியாக துன்புறுத்திய குற்றமாக கருத முடியாது எனக்கூறி சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டது.