\
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
Published on: 

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என பதில் தர தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. 8 மாதம் கடந்துவிட்ட நிலையில் இன்னமும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.
தனியார் மற்றும் சில அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்களைப் படித்துவருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என பதில் தர தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளதா? என அரசு தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. 40% கட்டணத்திற்கு அதிகமாக வசூலித்த பள்ளிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் போதுதான்,தமிழக அரசுக்கு  நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com