சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நீட் தேர்வு ஏன்?: நீதிபதிகள் சரமாரி கேள்வி
பிளஸ் டூ தேர்வு முடிந்தவுடன் நீட் தேர்வு நடத்தாதது ஏன்? சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நீட் தேர்வு ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் மதிப்பெண்ணுடன் பிளஸ் டூ மதிப்பெண்ணை சேர்க்க கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது பிளஸ் டூ தேர்வு முடிந்தவுடன் நீட் தேர்வு நடத்தாதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டதன் காரணம் என்ன?. மாநிலங்களுக்கிடையே கல்வித்தரத்தில் வேறுபாடு உள்ளபோது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நீட் தேர்வு நடத்துவது ஏன் எனவும் நீதிபதிகள் அமர்வு கேள்வியெழுப்பியது .இது குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு வழக்கை தலைமை நீதிபதிக்கு மாற்றிப் பரிந்துரை செய்தது.