ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆட்டோக்களில் டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்படவேண்டும் என்றும், பயணிகளுக்கு பில்லை பிரிண்ட் செய்து தரவேண்டும் என்றும் 2013ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்திருந்த அரசாணையை முறையாக அமல்படுத்தவேண்டும் என்றும் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருந்த எஸ்.பி ராமமுத்து புதிதாக ஒரு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அனைத்து ஆட்டோக்களிலும் எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டிருப்பதாகவும், பிரிண்ட் எடுக்க செலவாகும் என்பதால் அந்த கருவி மட்டும் பொருத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஆட்டோ உரிமையாளர்களும், பயணிகளும் பயனடையும் வகையில் கட்டணங்களை மாற்றியமைக்கவேண்டும் எனவும், பெட்ரோல், டீசல் விலைக்கேற்ப கட்டணம் தானாக மாறும் வகையில் மென்பொருளை பயன்படுத்தலாம் எனவும் அறிவுரை வழங்கியுள்ளனர். அதேசமயம் மீட்டர் பொருத்தியும் செயல்படுத்தாத ஆட்டோக்களை கண்டறிய போக்குவரத்துத் துறையும் காவல்துறையும் திடீர் சோதனைகள் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com