தமிழ்நாடு
பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கும்பகோணம் பள்ளி தீ விபத்து தொடர்பாக பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மாவட்ட கல்வி அதிகாரி பினாகபாணி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பினாகபாணியின் பணிநீக்க உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதி உள்ளதா என்பது குறித்து திடீர் ஆய்வு நடத்த வேண்டும், கல்வி தருவது அடிப்படை உரிமை என்றாலும் அவை பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர். நாட்டின் சொத்தான குழந்தைகளுக்கு பாதுகாப்பான கல்விச் சூழலை உருவாக்க வேண்டியது அரசின் கடமை எனவும் நீதிபதிகள் தெரிவித்துக்கொண்டனர்.