சென்னை உயர்நீதிமன்றம் - நடிகை த்ரிஷாpt desk
தமிழ்நாடு
சென்னை: மதில் சுவர் தொடர்பான பிரச்னை – நடிகை த்ரிஷா தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
மதில் சுவர் தொடர்பாக அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னையில் சமரசம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நடிகை த்ரிஷா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
செய்தியாளர்: V.M.சுப்பையா
சென்னை செனடாப் ரோடு இரண்டாவது வீதியில் தனது வீட்டின் கட்டமைப்பை பாதிக்கும் வகையில், பொதுவான மதில் சுவரை இடித்து கட்டுமானம் மேற்கொள்ள பக்கத்து வீட்டுக்காரர் மெய்யப்பனுக்கு நிரந்தரத் தடை விதிக்கக் கோரி, நடிகை த்ரிஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பொதுவான மதில் சுவரை இடிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
court orderpt desk
இந்த வழக்கு நீதிபதி டீக்காரமன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்களுக்குள்ளான பிரச்னையை நடிகை த்ரிஷா மற்றும் எதிர் தரப்பினர் சமரசமாக பேசி தீர்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை முடித்து வைத்த நீதிபதி, நடிகை த்ரிஷா செலுத்திய நீதிமன்ற கட்டணத்தை திருப்பி அளிக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.