“நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டினால் பட்டா இல்லை” - உயர்நீதிமன்றம்

“நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டினால் பட்டா இல்லை” - உயர்நீதிமன்றம்
“நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டினால் பட்டா இல்லை” - உயர்நீதிமன்றம்

நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டினால், அந்த இடத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க‌ உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அயனாவரத்தில் உள்ள குளத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வரும் 10 பேருக்கு, அரசு திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா வழங்க அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள், 60 ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு, மின் இணைப்பு, குடும்ப அட்டை என அங்கீகரிக்கப்பட்ட அரசு ஆவணங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

இவற்றை கருத்தில் கொண்டு தாங்கள் வசித்து வரும் இடத்திலேயே தங்களுக்கு பட்டா வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென மனுதாரர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என சுட்டிக்காட்டிய நீதிபதி, நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளுக்கு இலவச பட்டா வழங்க உத்தரவிட முடியாது என தெரிவித்தார். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற 8 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து 12 வாரங்களுக்கு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com