உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.37 லட்சம் மோசடி : ஒருவர் கைது

உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.37 லட்சம் மோசடி : ஒருவர் கைது

உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.37 லட்சம் மோசடி : ஒருவர் கைது
Published on

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி ரூ.37 லட்சம் மோசடி செய்த நபரை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் சதீஸ்குமார் (35). இவர் சென்னையில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் முட்டாஞ்செட்டியை சேர்ந்த சத்துணவு உதவியாளர் கனிமொழி என்பவரின் மகனுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கிளார்க் வேலை வாங்கி தருவதாக கூறி, சதீஸ்குமார் லட்ச கணக்கில் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

ஆனால் கூறியபடி வேலை வாங்கி தராததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கனிமொழி நாமக்கல் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுபாஷ் தலைமையிலான போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

விசாரணையில் வழக்கறிஞர் சதீஸ்குமார் கனிமொழி மட்டுமின்றி மேலும் 11 பேரிடம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கிளார்க் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.37 லட்சம் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சதீஸ்குமாரை கைது செய்த குற்றப்பிரிவு போலீசார், அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com