\
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்குகள் இன்று பிற்பகல் விசாரணை

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்குகள் இன்று பிற்பகல் விசாரணை

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்குகள் இன்று பிற்பகல் விசாரணை
Published on

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்குகளை இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் இணைந்து தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும், கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்கவேண்டும் எனவும் இருவர் சார்பிலும் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதேபோல தணிகாச்சலம் என்பவரும் பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த இரு வழக்குகள், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தன.

இந்நிலையில், பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் சார்பில் பொதுக்குழுவுக்கு தடைகோரி வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், அவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் முறையீடு செய்தார். அப்போது அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில், எந்த செயல்திட்டத்தையும் அறிவிக்காமல் பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து அனைத்து வழக்குகளும் பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com