\
திருப்போரூர், ஆளவந்தான் கோவில் சொத்துக்களை மீட்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திருப்போரூர், ஆளவந்தான் கோவில் சொத்துக்களை மீட்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திருப்போரூர், ஆளவந்தான் கோவில் சொத்துக்களை மீட்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
Published on

திருப்போரூர் கந்தசாமி கோவில், ஆளவந்தான் கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்டு, அறிக்கை தாக்கல் செய்ய இந்துசமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவில் சொத்துக்களை அபகரிக்க சிலர் முயற்சித்து வருவதாகவும், அதனை தடுத்து சொத்துக்களை பாதுகாக்கக் கோரி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. திருப்போரூர் கந்தசாமி கோவில் மற்றும் ஆளவந்தான் கோவிலின் சொத்துக்களை மறு உத்தரவு வரும் வரை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஏப்ரல் 13ம் தேதிக்குள் மீட்கப்பட்டுவிடும் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com