எய்ட்ஸ் தொற்று பாதிக்கப்பட்டவருக்கு மனிதாபிமானத்தில் தண்டனை ரத்து..!

எய்ட்ஸ் தொற்று பாதிக்கப்பட்டவருக்கு மனிதாபிமானத்தில் தண்டனை ரத்து..!

எய்ட்ஸ் தொற்று பாதிக்கப்பட்டவருக்கு மனிதாபிமானத்தில் தண்டனை ரத்து..!
Published on

எய்ட்ஸ் தொற்று பாதிக்கப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயலாளராக இருந்தவர், போலி ஆவணங்கள் மூலம் 10 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் கடன்‌பெற்று மோசடி செய்ததாக 2‌ வழக்குகள் தொடரப்பட்டன. எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு வேலூர் நீதிமன்றம், ஒன்றரை ஆ‌ண்டு சிறை தண்டனை விதித்தது.

வேலூர் ‌அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்ப‌ட்ட மேல்முறையீட்டு மனுவில் சிறை தண்டனை ஒரு மாதமாக குறைக்கப்பட்டது. எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தனக்கு விதிக்கப்‌பட்ட சிறை‌ தண்டனையை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் சீராய்வு மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன், மனிதாபிமான அடிப்படையில், வங்கி செயலாளருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை ரத்து செய்து ஆணையிட்டார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com