\
"விஷமிகள் எனக்கூறுவதா?" - உயர்நீதிமன்றம் கண்டனம்

"விஷமிகள் எனக்கூறுவதா?" - உயர்நீதிமன்றம் கண்டனம்

"விஷமிகள் எனக்கூறுவதா?" - உயர்நீதிமன்றம் கண்டனம்
Published on

டாஸ்மாக் மதுபானக்கடை‌ளை எதிர்த்துப் போராடுபவர்களை விஷமிகள் என்று கூறுவதா என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 21 பேர் மீதான வழக்கை கடந்த மே மாதம் ரத்து செய்த நீதிபதிகள், இதுதொடர்பாக அரசுக்கு எட்டு கேள்விகளை எழுப்பியிருந்தனர். இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஊடகங்கள் தவறாக சித்தரிப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெ‌ரிவித்தார். டாஸ்மாக் கடைகளை உடைக்கும் வேலைகளை சமூக விரோத விஷமிகள் போல செயல்படுவதாக அவர் கூறினார். இதனால் கோபமடைந்த நீதிபதிகள், டாஸ்மாக் கடைகளை எதிர்த்து போராட்டம் நடத்தும் மக்களை சமூக விரோதிகள் என்பதா என்று கேள்வி எழுப்பினர். டாஸ்மாக் கடைகளை எதிர்த்து போராடும் பெண்கள்,‌குழந்தைகளுக்கு பதிலாக, கடைகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு தருவதாகவும், மக்களுக்கு பாதுகாப்பு தருவதே காவல்துறையினரின் வேலை‌ என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து சிறைத்துறையில் நிலவும் குறைபாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com