‘ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதில் ஏன் பாரபட்சம்?’ - நீதிமன்றம் கேள்வி

‘ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதில் ஏன் பாரபட்சம்?’ - நீதிமன்றம் கேள்வி

‘ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதில் ஏன் பாரபட்சம்?’ - நீதிமன்றம் கேள்வி
Published on

ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு மாறுவது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தருமபுரியைச் சேர்ந்த மனுதாரர் ஒருவர் ஆயுள் தண்டனை பெற்று வரும் தன் மகனை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி கைதியின் தாயார் அமுதா ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். இது குறித்து 6 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென சேலம் சிறை கண்காணிப்பாளருக்கு கடந்த ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் சிறைக்கண்காணிப்பாளர் உத்தரவை நிறைவேற்றவில்லை. இதனால் அவர் மீது அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய தலைமை வழக்கறிஞர், செந்திலை பொறுத்தவரை முன் கூட்டி விடுதலை செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என தமிழக அரசு கருதியதால் தாய் அமுதாவின் மனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான சில விளக்கங்களையும் அளித்தார். வாதங்களை கேட்டபின் பேசிய நீதிபதிகள் ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு மாறுவது ஏன் எனக் கேள்வி எழுப்பினர்.

குறிப்பாக தர்மபுரி பேருந்து தீ வைப்பு சம்பவத்தில் மூன்று மாணவிகளை எரித்து கொன்றவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, அரசு அவர்களை முன்கூட்டி விடுதலை செய்தது. ஆனால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 7 பேரை விடுவிக்க அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.  சந்தர்ப்பவசத்தால் குற்றம் புரிந்தவர்களை விடுவிப்பதில் கூட சட்டம் ஒழுங்கு பிரச்னையை அரசு காரணம் காட்டுகிறது.

10 ஆண்டுகள் நிறைவு செய்தவர்களை விடுவிக்க வேண்டுமென அரசு முடிவெடுத்தால் அதை அனைவருக்கும் சமமாகத்தானே வழங்க வேண்டும். ஆனால் ஏன் இப்படி ஒவ்வொரு வழக்குக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என காரணம் காட்டி அரசின் நிலைப்பாடு ஏன் மாறுபடுகிறது?.அரசு இப்படி மாறி மாறி முடிவெடுக்க அரசியல் அழுத்தம் ஏதும் காரணமா என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்.

வழக்கை நாளைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அரசு மாற்று நிலைப்பாடு எடுக்க காரணம் என்ன என விளக்கமளிக்கவும் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com