சுருக்குமடி வலை விவகாரத்தில் தமிழக அரசு உரிய முடிவெடுக்கவேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு

சுருக்குமடி வலை விவகாரத்தில் தமிழக அரசு உரிய முடிவெடுக்கவேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு
சுருக்குமடி வலை விவகாரத்தில் தமிழக அரசு உரிய முடிவெடுக்கவேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக உரிய முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

புதுவை மாநிலத்தில் சுருக்குமடி வலை சம்பந்தமாக மீனவர் கிராமங்களுக்கு இடையே பயங்கர ஆயுதங்களுடன் கடந்த 28ம் தேதி கலவரம் ஏற்பட்டது. இதனை தடுக்க புதுவை காவல்துறை வனத்தை நோக்கி பல முறை துப்பாக்கிச்சூடு நடத்தி கலவரக் கும்பலை கலைத்தனர். மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோரக் காவல் படை காவல்துறையும் 24 மணி நேரமும் அங்கு கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகிறார்கள். கடலூர் மாவட்ட கடற்கரைப் பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

இந்நிலையில் இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. சுருக்குமடி வலைகளை பயன்படுத்த மீனவர்களுக்கு உரிமை உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருப்பதால் அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதற்கு, சுருக்குமடி வலையைக் கொண்டு மீன்பிடி தொழில் செய்வது குறித்து அரசு உரிய முடிவு எடுக்கும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சுருக்குமடி வலையைப் பயன்படுத்தும் விஷயத்தில் நாகை, புதுச்சேரி, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் மோதலில் ஈடுபடுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக உரிய முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com