\
“தமிழக அரசின் பிளாஸ்டிக் தடை செல்லும்” - நீதிமன்றம் உத்தரவு

“தமிழக அரசின் பிளாஸ்டிக் தடை செல்லும்” - நீதிமன்றம் உத்தரவு

“தமிழக அரசின் பிளாஸ்டிக் தடை செல்லும்” - நீதிமன்றம் உத்தரவு
Published on

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்த அரசாணை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழக அரசின் இந்தத் தடை உத்தரவுக்கு எதிராக பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்த அரசாணை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com