திருவள்ளூர் ஆட்சியருக்கு ஊதியம் வழங்க இடைக்காலத் தடை

திருவள்ளூர் ஆட்சியருக்கு ஊதியம் வழங்க இடைக்காலத் தடை

திருவள்ளூர் ஆட்சியருக்கு ஊதியம் வழங்க இடைக்காலத் தடை
Published on

திருவள்ளூர் ஆட்சியர், மாநில வருவாய்த்துறை செயலர் உள்ளிட்டோருக்கு ஊதியம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மாதவரத்தைச் சேர்ந்த ஃபரிதா சவுகத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனக்கு சொந்தமான கட்டடத்தில் இயங்கும் மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல், மாத வாடகை 98 ஆயிரத்து 925 ரூபாய் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டிருந்தார். வாடகை நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க உத்தரவிடுமாறும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வாடகை நிலுவைத்தொகை மற்றும் புதிய ஒப்பந்தத்தை வழங்கும்வரை திருவள்ளூர் ஆட்சியர், மாநில வருவாய்த்துறை செயலர், மாதவரம் வட்டாட்சியர் ஆகியோருக்கான ஊதியத்தை நிறுத்திவைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com