ஜெ. வாழ்க்கை வரலாற்று படத்திற்கு எதிராக ஜெ.தீபா தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

ஜெ. வாழ்க்கை வரலாற்று படத்திற்கு எதிராக ஜெ.தீபா தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

ஜெ. வாழ்க்கை வரலாற்று படத்திற்கு எதிராக ஜெ.தீபா தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
Published on

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு தடை கோரிய ஜெ.தீபா வழக்கின் மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தலைவி, ஜெயா ஆகிய திரைப்படங்களும், குயின் என்ற இணையதள தொடரும் எடுக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையைத் தாண்டி அவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தீபா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தலைவி படத்தை தீபாவுக்கு போட்டு காட்ட வேண்டும் என்பதையும் படக்குழுவினர் மறுத்துவிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com