“இந்த இடங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்கக்கூடாது”- உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

“இந்த இடங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்கக்கூடாது”- உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு
“இந்த இடங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்கக்கூடாது”- உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

வேளாண் நிலங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகாவில் ஆரம்பாக்கம் கிராமத்தில் உள்ள யாழினி நகரில் டாஸ்மாக் கடை திறக்க தடை விதிக்கக்கோரி, அந்த பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்தப் பகுதி வேளாண் நிலம் என்பதால் டாஸ்மாக் கடை திறக்கப்போவதில்லை என்றும், சட்ட விதிகளின்படி உரிய இடத்தில் அமைக்க அனுமதிக்கப்படும் என்றும் அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்டு, வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், வேளாண் நிலங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்கக்கூடாது எனவும், சட்ட விதிகளின்படி, உரிய இடத்தில்தான் அமைக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com