"மனிதர்களை பயன்படுத்துவதில்லை என உறுதிமொழியேற்றிடுக'' - சென்னை உயர் நீதிமன்றம்

"மனிதர்களை பயன்படுத்துவதில்லை என உறுதிமொழியேற்றிடுக'' - சென்னை உயர் நீதிமன்றம்
"மனிதர்களை பயன்படுத்துவதில்லை என உறுதிமொழியேற்றிடுக'' - சென்னை உயர் நீதிமன்றம்

கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழியை மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்துதல் கூடாது, விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் நிவாரணம் பெறுவதை உறுதி செய்திட வேண்டும் எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இவை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வுமுன் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவது மனிதத் தன்மையற்ற செயல் என்றும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் எனவும் கூறியிருந்தனர்.

இவ்வழக்குகள் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது ஆஜரான அரசுத்தரப்பு வழக்கறிஞர் முத்துக்குமார், பாதாளச் சாக்கடைகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதில் தற்போது இயந்திரங்கள்தான் பயன்படுத்தப்படு்கின்றன எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழியை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை 6 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com