\
பாஜகவை சேர்ந்த நடிகைகளை ஆபாசமாக பேசிய வழக்கு: மன்னிப்பு கேட்ட திமுகவின் சைதை சாதிக்!

பாஜகவை சேர்ந்த நடிகைகளை ஆபாசமாக பேசிய வழக்கு: மன்னிப்பு கேட்ட திமுகவின் சைதை சாதிக்!

பாஜகவை சேர்ந்த நடிகைகளை ஆபாசமாக பேசிய வழக்கு: மன்னிப்பு கேட்ட திமுகவின் சைதை சாதிக்!
Published on

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நடிகைகளை ஆபாசமாக விமர்சித்த வழக்கில் மன்னிப்புக்கோரி திமுக பேச்சாளர் சைதை சாதிக் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சென்னை கடந்த மாதம் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவைச் சேர்ந்த நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து ஆபாசமாக பேசியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப் பிரிவால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி சைதை சாதிக் தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, நடிகைகளிடம் மன்னிப்பு கோரி சைதை சாதிக் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணை அதிகாரி முன்பு ஒரு வார காலத்திற்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டுமமென்ற நிபுந்தனையுடன் சைதை சாதிக்கிற்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com