
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தேசிய மற்றும் மாநில சாலைகளில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட 1,700 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக இதுவரை 800 கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தவறாக புரிந்து கொண்டு தமிழக அரசு புதிதாக டாஸ்மாக் கடைகளை திறந்து வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட தலைமை நீதிபதி, விளக்கம்பெற்று தெரிவிக்கும் வரை புதிதாக டாஸ்மாக் கடை திறக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என தெரிவித்தார்.