கைதாவர்கள்
கைதாவர்கள்புதியதலைமுறை

சென்னை To இலங்கை | ஒருவர் பின் ஒருவராக சிக்கும் கடத்தல் கும்பலின் புள்ளிகள்.. நீளும் பட்டியல்!

சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 5 கள்ள துப்பாக்கிகள் 79 தோட்டாக்கள் மற்றும் 5 கிலோ போதைப்பொருள் பறிமுதல் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் கைது
Published on

சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 5 கள்ள துப்பாக்கிகள், 79 தோட்டாக்கள் மற்றும் 5 கிலோ போதைப்பொருள் பறிமுதல் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் கைது

சென்னை அரும்பாக்கம் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை சம்பவத்தில் ஈடுப்பட்ட நபர்களை கைது செய்து போலீசார் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பின்னர் அவர்கள் அளித்த தகவலின் பேரில் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் ரவி(47), கணேசன் (50), மற்றும் திருவள்ளூரை சேர்ந்த மதன்(45) ஆகிய மூன்று நபர்களை இருதினங்களுக்கு முன் அரும்பாக்கம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 38 கிலோ கெட்டமைன் போதைப்பொருள், ரூ. 51லட்சம் பணம், 105 கிராம் தங்க நகை, 5 செல்போன், 2 பாஸ்போர்ட், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் இந்த கும்பல் இலங்கைக்கு கள்ளத் துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக தனிப்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிட்லப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜா(45) மற்றும் சாலிகிராமம் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் (36) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர்

விசாரணையில் இவர்கள் போதைப்பொருள் கடத்துவதும், வெளி நாடுகளுக்கு துப்பாக்கிகள் கடத்துவதும் தெரியவந்தது. மேலும், இந்த கும்பல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வடமாநிலத்தில் இருந்து கள்ளத் துப்பாக்கிகளை வாங்கி வந்து கடந்த முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, சிட்லப்பாக்கத்தில் உள்ள ராஜா வீட்டில் அதிரடி சோதனை நடத்தி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 நாட்டு துப்பாக்கி, 79 தோட்டாக்கள், 4 கிலோ மெத்தம்பெட்டைமன் போதைப்பொருள், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த கும்பல் யாரிடம் இருந்து கள்ளத் துப்பாக்கிகளை வாங்கினர்? யாரும் மூலம் வெளிநாட்டிற்கு கடத்த திட்டமிட்டனர் என்பது குறித்தும், இதில் சர்வேத போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதாக? என்பது குறித்தும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் வீட்டில் 5 கள்ள துப்பாக்கிகள், 79 தோட்டாக்கள் பறிமுதல் செய்த சம்பவமானது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com