\
சென்னையில் 3 பேருக்கு குண்டர் சட்டம்

சென்னையில் 3 பேருக்கு குண்டர் சட்டம்

சென்னையில் 3 பேருக்கு குண்டர் சட்டம்
Published on

சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது. 

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், செல்வம் ஆகிய 2 பேர் மீது அரும்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. வேளச்சேரியை சேர்ந்த ஆகாஷ் என்பவர் மீது ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்நிலையில் இந்த மூவரும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால் சென்னை மாநகர காவல் ஆணையாளர் மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி மேற்படி மூவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

இவர்களில் ஆகாஷ் என்பவர் கடந்த மாதம் ஒருதலை காதலால் தனது காதலியை தீயிட்டு கொளுத்தியவர். இதில் இந்துஜா என்ற பெண்ணும், அவரது தாயும் தீக்கிரையாகினர். இரட்டை கொலை வழக்கில் சிறையில் இருக்கும் இந்த ஆகாஷ் மீது தற்போது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com