\
சென்னையில் விடிய விடிய மழை

சென்னையில் விடிய விடிய மழை

சென்னையில் விடிய விடிய மழை
Published on

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையின் எழும்பூர், அமைந்தகரை, சேத்துபட்டு, அண்ணா சாலை, ஈக்காட்டுத்தாங்கல், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்தது. வளரவாக்கம், போரூர், ராமாபுரம், மதுவராயில், முகப்பேர், திருவேற்காடு போன்ற இடங்களிலும் பெருமழை பெய்தது. பாதுகாப்பு கருதி ஓரிரு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

புறநகர்ப் பகுதிகளான பாடி, கொரட்டூர், ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

தாம்பரம், வண்டலூர், காட்டாங்கொளத்தூர் உள்ளிட்ட சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடுமையான காற்றுடன் கனமழை பொழிந்தது. சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் நேற்று நள்ளிரவு வரைகூட மழை பெய்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com