\
மழை
மழைpt web

இரண்டாம் நாளாக வெளுத்துவாங்கிய மழை; குளுகுளுவென மாறிய சென்னை!

சென்னையில் இரண்டாவது நாளாக இரவு நேரத்தில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
Published on

சென்னையில் நேற்றுமுன் தினம் நள்ளிரவில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இரவு சுமார் 9 மணி முதல் நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, கோயம்பேடு, தி.நகர், நுங்கம்பாக்கம், எழும்பூர், மயிலாப்பூர், அடையாறு, வேளச்சேரி, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்தது. அதேபோன்று பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி, அம்பத்தூர், குன்றத்தூர், அனகாபுத்தூர், தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

மழையின் காரணமாக பூந்தமல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். மழையால் தாழ்வான இடங்கள், முக்கிய சாலைகளில் தேங்கி இருந்த தண்ணீரால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com