புழல் சிறையில் தீ விபத்துpt desk
தமிழ்நாடு
சென்னை: புழல் சிறையில் ஏற்பட்ட தீ விபத்து - காரணம் என்ன?
சென்னை புழல் சிறையில் ஏற்பட்ட தீ விபத்து. செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
செய்தியாளர்: எழில்
சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை பிரிவு, விசாரணை பிரிவு, பெண்கள் பிரிவு என 3 பிரிவுகளில் 4000-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். இந்த நிலையில், தண்டனை பிரிவில் பழைய காகிதங்களை அரைத்து அட்டை தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த இடத்தில் திடீரென புகை வந்துள்ளது. இதையடுத்து சிறைத்துறை தரப்பில் செங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
புழல் சிறையில் தீ விபத்துpt desk
தகவலையடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். புகை வந்த இடத்தில் தண்ணீரை பீச்சியடித்தும், தீ பரவாமலும் எரியும் காகிதங்களையும் கட்டுப்படுத்தி அணைத்தனர். புழல் சிறையில் ஏற்பட்ட தீ விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.