தமிழ்நாடு
சென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
சென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிககனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிவர் புயலாக மாறி வரும் 25ஆம் தேதி மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.