தமிழ்நாடு
சென்னை: பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் ஐக்கியமான நிர்வாகிகள்
சென்னை: பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் ஐக்கியமான நிர்வாகிகள்
பாஜகவில் இருந்து விலகிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்அதிமுகவில் இணைந்தனர்.
பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த சிடிஆர். நிர்மல் குமார் தலைமையிலான தமிழக பாஜக நிர்வாகிகள் மேலும் பலர் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தனர்.
அறிவுசார் பிரிவின் முன்னாள் மாநிலச் செயலாளர் கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன், ஓபிசி அணியின் மாநில செயலாளர் அம்மு என்ற ஜோதி, திருச்சி புறநகர் மாவட்ட துணைத் தலைவர் விஜய் ஆகியோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், சிடிஆர். நிர்மல் குமார் தலைமையில் மாநில பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.