\
சென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...!

சென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...!

சென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...!
Published on

செங்கல்பட்டில் இருந்து புறப்படும் ரயில்கள் அனைத்தும் இன்று முதல் 20-ம் தேதி வரை காலை மற்றும் மாலை வேலைகளில் கால தாமதமாக புறப்படும் என ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் காட்டாங்கொளத்தூர் - சிங்கப்பெருமாள்கோயில் இடையே இன்று முதல் 20-ம் தேதி வரை மூன்றாவது லைன் இணைப்பு பணிகள் மற்றும் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. 

இதன் காரணமாக செங்கல்பட்டில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் காலை மற்றும் மாலை வேளைகளில் காலதாமதமாகவே புறப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த பணிகள் நடைபெற இருப்பதால், செங்கல்பட்டிலிருந்து காட்டாங்குளத்தூர் கூடுவாஞ்சேரி செல்லக்கூடிய குறிப்பிட்ட சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், காட்டாங்குளத்தூர் கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை கடற்கரை வரை ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com