“கால்டாக்ஸியில் வந்த சவாரி” : மரண பயத்தை கண்ட சென்னை டிரைவர்..!

“கால்டாக்ஸியில் வந்த சவாரி” : மரண பயத்தை கண்ட சென்னை டிரைவர்..!

“கால்டாக்ஸியில் வந்த சவாரி” : மரண பயத்தை கண்ட சென்னை டிரைவர்..!
Published on

ஃபாஸ்ட்ராக் மூலம் வந்த சவாரியால் சென்னை டிரைவர் கொலை செய்யப்படும் நிலைக்கு சென்று, உயிருடன் திரும்பியுள்ளார்.

சென்னை, போரூர் அருகே உள்ள ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் கோபிநாத். இவர் தனியார் டாக்ஸி நிறுவனமான ஃபாஸ்ட்ராக்கில் (Fast track ) கார் ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவருக்கு ஒரு சவாரி வந்துள்ளது. தான் கார் ஓட்டும் நிறுவனத்தின் மூலமாக அந்த சவாரி வந்ததால், அதை நம்பி சென்னையை அடுத்து கும்மிடிப்பூண்டி பகுதியில் மூன்று பேரை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார் கோபி. கார் சென்றுகொண்டிருக்கும்போது, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்துமாறு அந்த 3 பேரும் சொல்லியுள்ளனர். கார் நின்றதும், 3 பேரும் பெரிய கத்தியைக் காட்டி அந்த டிரைவரிடம் இருந்த பணம், செல்போன் மற்றும் காரை பிடுங்கியுள்ளனர். அத்துடன் அவரை கொலை செய்யவும் முயன்றுள்ளனர். 

அங்கிருந்து தப்பியோட முயன்ற அவர், எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால், நாங்களும் கொள்ளையர்களின் கூட்டாளிகள் என அந்த இருவரும் கூறவே, டிரைவர் அதிர்ந்து போனார். பைக்கில் வந்த இருவரும் டிரைவரை  மடக்கி பிடித்துள்ளனர். 

பின்னர், டிரைவரை ஏற்றிக் கொண்டு கொள்ளையர்களை காரை எடுத்துச் சென்றனர்.  கெட்னமல்லி என்ற பகுதியில் காரை ஓட்டிச்செல்லும்போது, காருக்குள் வைத்து கோபியை கொல்லவும் முயன்றுள்ளனர். அத்துடன் காரில் இருந்த ஜி.பி.எஸ் கருவியை உடைத்துள்ளனர். அப்போது நடந்த மோதலில் கொள்ளையர்களில் ஒருவர் கீழே விழ, கோபி தப்பிக்க முயன்றுள்ளார். படுகாயத்துடன் ஊருக்குள் ஓடிய அவர், அங்கிருந்த தனியார் நிறுனத்தின் உதவியுடன் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை டி.எஸ்.பி கல்பனா, உடனே கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளார். விரைந்து தேடியும் காருடன் கொள்ளையர்கள் தப்பித்துவிட்டனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் விசாரித்துள்ளனர். 

அடுத்த நாள் அந்த கொள்ளையர்கள் காருடன் பிடிபட்டுள்ளனர். திருடிய காரின் மூலம், மளிகை கடை ஒன்றை தாக்கி அங்கிருந்த பொருட்கள் மற்றும் பணத்தை அவர்கள் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. அத்துடன் கொள்ளையர்களில் முக்கிய குற்றவாளியின் மீது 2 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்று பலரிடம் அந்தக் கும்பல் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com