தமிழ்நாடு
கொரோனா குணமடைந்த 1 லட்சம் பேருக்கு தொலைபேசியில் மருத்துவ ஆலோசனை - சென்னை மாநகராட்சி
கொரோனா குணமடைந்த 1 லட்சம் பேருக்கு தொலைபேசியில் மருத்துவ ஆலோசனை - சென்னை மாநகராட்சி
கொரோனா சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய சுமார் ஒரு லட்சம் நபர்களுக்கு தொலைபேசி வாயிலாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களை கண்காணித்து ஆலோசனை வழங்கும் திட்டத்தை அண்மையில் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம், இதுவரை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 712 நபர்களுக்கு தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதில், ஒரு சில நோய் அறிகுறிகளுடன் இருந்த 5 ஆயிரத்து 874 பேருக்கு 'விட்மெட்' என்ற செயலி மூலம் மருத்துவர்களால் இலவச ஆலோசனை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான ஆலோசனை மையத்தில் பணிபுரிய 150 தொலைபேசி அழைப்பாளர்களை வழங்கிய சென்னை தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனத்திற்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி சான்றிதழை வழங்கினார்.