\
சென்னையில் கொரோனா பாதிப்பு - 1000ஐ கடந்த 4 மண்டலங்கள்

சென்னையில் கொரோனா பாதிப்பு - 1000ஐ கடந்த 4 மண்டலங்கள்

சென்னையில் கொரோனா பாதிப்பு - 1000ஐ கடந்த 4 மண்டலங்கள்
Published on

சென்னையில் 4 மண்டலங்களில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,767 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 147 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,25,101லிருந்து 1,31,868ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 51,784லிருந்து 54,441ஆக உயர்வுந்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் மீட்பு விகிதம் 41.4 சதவீதமாக முன்னேறியுள்ளது.

கோரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,720லிருந்து 3,867 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 15,512 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 103 பேர் கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதில் 4 மண்டலங்களில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com