சென்னை தினத்தை கொண்டாட மாநகராட்சி அசத்தல் திட்டம்... கலந்துகொள்ள நீங்கள் ரெடியா?

சென்னை தினத்தை கொண்டாட மாநகராட்சி அசத்தல் திட்டம்... கலந்துகொள்ள நீங்கள் ரெடியா?

சென்னை தினத்தை கொண்டாட மாநகராட்சி அசத்தல் திட்டம்... கலந்துகொள்ள நீங்கள் ரெடியா?
Published on

சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை சாலையில் ஆகஸ்ட் 20 மற்றும் 21ஆகிய நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னைப் பட்டனம் 153-ம் ஆண்டு முதல் தற்போது வரை 383 ஆண்டுகளில் சென்னை மாநகரமாக பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

1539-ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் நாள் மெட்ராஸாக உருவான நம்முடைய சென்னையை கொண்டாடும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஆகஸ்ட் 20 மற்றும் 21 ஆகிய நாட்களில் இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து `சென்னை தினத்தை’ பெசன்ட் நகர் எலியட்ஸ் சாலையில் மாலை 3:30 மணி முதல் இரவு 11:30 வரை பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் வகையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் போன்றவையும் உணவு மற்றும் சிற்றுண்டி விற்பனை கடைகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கோவிட் தடுப்பூசி முகாம்கள் மற்றும் இயற்கை உர விற்பனைக்கான கடைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த பிரம்மாண்ட கொண்டாட்டத்துடன் இன்னும் பல்வேறு நிகழ்ச்சிகளை இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் கைபேசிகளில் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் வகையில் சென்னையில் உள்ள முக்கிய பூங்காக்களில் 'செல்ஃபி பூத்'கள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆகஸ்ட் 2ம் தேதி சென்னையில் பல இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் சென்னைப் பள்ளிகளில் ஓவியப்போட்டி, புகைப்படப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், சென்னை தினத்தை கொண்டாட பிரத்யேகமாக பாடல் ஒன்றும் வெளியிடப்பட உள்ளது.

சிங்கார சென்னையாக வளர்ந்து இன்று பிரமாண்ட பரிமாணத்தில் பல பகுதிகளை சார்ந்த மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டி, எல்லோருடைய மனதிலும் ஒரு உணர்வுபூர்வமான இடத்தை அடைந்திருக்கும் நம் சென்னையை கொண்டாட நம்ம சென்னை நம்ம பெருமை என்ற உடணர்வுடன் பொதுமக்கள் அனைவரும் ஆகஸ்ட் 20 மற்றும் 21 ஆகிய நாட்களில் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நடைபெறும் சென்னை தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com