சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரிப்பு

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரிப்பு

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரிப்பு
Published on

சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும்நிலையில், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 146 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் கொரோனா கட்டுப்பாட்டு மையங்களாக 8 தெருக்கள் உள்ளன. சென்னையில் மொத்தமாக 1106 தெருக்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் கொரோனா கட்டுப்பாட்டு அறையும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அவசரகால கட்டுப்பாட்டு அறை மீண்டும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியுள்ளது. சென்னை டிஎம்எஸ் வளாகத்திலுள்ள சுகாதாரத்துறை இயக்குநரக அலுவலகத்தில் மீண்டும் செயல்பட்டு வருகிறது. அங்கு நோய்த்தொற்று கண்காணிப்பு பிரிவு, ஆய்வக பிரிவு, 24 மணிநேர கால்சென்டர் பிரிவு ஆகியவை செயல்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com