
சென்னையில் மாநகரப்பேருந்து மீது இருச்சக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை டுமீல்குப்பத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் இரு சக்கரவாகனத்தில் சாந்தோம் பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது நிலைதடுமாறிய அவர்கள் மாநகரப்பேருந்தில் மோதி விபத்தில் சிக்கினர். இதில் அஜீத்குமார் என்ற 18 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவருடன் வந்த மற்ற இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதொடர்பாக சாஸ்திரி நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.