எந்தெந்த பகுதியில் எத்தனை பேருக்கு கொரோனா - சென்னை மாநகராட்சி விளக்கம்
சென்னையில் எந்தெந்த பகுதியில் எத்தனை பேருக்கு கொரோனா என்பதை மண்டலம் வாரியாக மாநகராட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 834 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 163 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் எந்தெந்த பகுதியில் எத்தனை பேருக்கு கொரோனா என்பதை மண்டலம் வாரியாக மாநகராட்சி செய்தி வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
திரு.வி.க நகர் - 24
அண்ணாநகர் - 17
கோடம்பாக்கம் - 19
தண்டையார்பேட்டை - 14
தேனாம்பேட்டை - 12
பெருங்குடி - 6
வளசரவாக்கம் - 4
திருவொற்றியூர் - 4
அடையாறு - 4
மாதவரம் - 3
ஆலந்தூர் - 2
சோழிங்கநல்லூர் - 2
மற்ற மாவட்டங்களோடு தொடர்புடையவை - 07