சென்னை: ராயபுரம் மண்டலத்தில் ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு
சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 81,970 லிருந்து 85,940 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 29,100 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 10,108 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
சென்னையில் 5,946 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் எந்தெந்த மண்டலங்களில் எவ்வளவு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ராயபுரம் - 1047
கோடம்பாக்கம் - 919
திருவிக நகர் - 737
தேனாம்பேட்டை - 640
அண்ணாநகர் - 493
வளசரவாக்கம் - 483
தண்டையார்பேட்டை - 474
அடையாறு - 316
அம்பத்தூர் - 285
திருவொற்றியூர் - 133
மாதவரம் - 92
மணலி - 79
பெருங்குடி - 77
சோழிங்கநல்லூர் - 74
ஆலந்தூர் - 71
பிற மாவட்டங்கள் - 26