\
சென்னையில் எந்தெந்த இடங்களில் கொரோனா பாதிப்பு? விவரம்!!

சென்னையில் எந்தெந்த இடங்களில் கொரோனா பாதிப்பு? விவரம்!!

சென்னையில் எந்தெந்த இடங்களில் கொரோனா பாதிப்பு? விவரம்!!
Published on

பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலவாரியாக ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரத்தில் 27 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணா நகர், திரு.வி.க நகரில் தலா 14 பேரும், கோடம்பாக்கத்தில் 12 பேரும், தேனாம்பேட்டையில் 10 பேரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தண்டையார்பேட்டையில் 7 பேர், வளசரவாக்கம், பெருங்குடி ஆகிய பகுதிகளில் 4 பேர், திருவொற்றியூர், மாதவரம், அடையாறு ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா 3 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆலந்தூர், சோழிங்கநல்லூரில் தலா இருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும் வெளிமாவட்டங்களை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 110 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com