\
தொழிலாளி பலி
தொழிலாளி பலிpt desk

சென்னை | மின்சாரம் தாக்கி கட்டட தொழிலாளி பலி

திருநின்றவூரில் கட்டட வேலையின் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

ஆவடி அருகே திருநின்றவூர், நத்தம்பேடு கிராமம், மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (22). கூலித ;தொழிலாளியான இவர், திருநின்றவூர் ஆர்.வி நகர் பகுதியில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மின் மோட்டார் சுவிட்ச்சை போட்ட இவர் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்..

தொழிலாளி பலி
திருச்சி | டிராக்டர் மீது லாரி மோதிய விபத்து - மூன்று பெண்கள் உயிரிழப்பு

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருநின்றவூர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com