சென்னை: காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் சங்கர் ஜிவால் தீடீர் ஆய்வு

சென்னை: காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் சங்கர் ஜிவால் தீடீர் ஆய்வு

சென்னை: காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் சங்கர் ஜிவால் தீடீர் ஆய்வு
Published on

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் சங்கர் ஜிவால் திடீரென ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினார்.

சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள காவல் ஆணையர் அலுவலகத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் ஆணையர் அலுவலகத்தின் வெளியே நோ பார்க்கிங்கில் காவலர்கள் மற்றும் புகார் அளிக்க வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்ததை கண்ட ஆணையர் உடனடியாக பார்க்கிங் வசதியை ஒழுங்கபடுத்த நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடி இருக்கும் காவல் ஆணையர் அலுவலக 3ஆவது வாயிலை திறக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. புகார் அளிக்க வரும் பொதுமக்களை சோதனை செய்து உள்ளே அனுப்பும் பாதுகாப்பு பிரிவு காவலர்களின் இடத்தை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை தலைமையக கூடுதல் கமிஷனர் லோகநாதனுடன் ஆலோசித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுரைகளை வழங்கினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com